மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கும், 2-வது டோஸ் 94 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.ஆன்மிக தலமான பழநி நகர் பகுதியில் இதுவரை 68 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் இதுவரை 99.50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இன்னும் 120-க்கும் மேற்பட்டோருக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். சுகாதாரத்துறையினர் அவர்களை வீடு வீடாகத் தேடி வருகின்றனர். விரைவில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago