கரோனா பரவலை தடுக்க, வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கரோனா நோய் தடுப்பு குறித்த கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். அப்போது நகராட்சி பணியாளர்கள், செவிலியர்கள் கரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஆட்சியர் பேசியதாவது: வரும் 7-ம் தேதி வரை கரோனா நோய் தடுப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்று விளக்கி கூறப்பட்டுள்ளது.
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கலாம். குழந்தைகளை கரோனா 3-வது அலையில் பாதிக்காமல் இருக்க அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில், சுகாதார பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், துணை இயக்குநர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர்கள் சுசித்ரா, இனியாள் மண்டோதரி, டாக்டர்கள் திலகு, ராஜா, விக்ரம், நகராட்சி பொறியாளர் கோபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago