டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நேற்று தஞ்சாவூரிலிருந்து விவசாயிகள் புறப்பட்டுச் சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தில், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆக.5-ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை பங்கேற்ற உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமையில், மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சி.பாஸ்கர், எம்.ராம், பிரதீப் ராஜ்குமார், பூதலூர் கண்ணன், கே.ராமசாமி, சசிகுமார், கே.சண்முகம், எஸ்.குமாரவேல், கே.வெங்கடேசன், கலைவாணன், ராஜேந்திரன், எம்.அய்யநாதன், ஆர்.காசிநாதன் உள்ளிட்ட 15 பேர் தஞ்சாவூரிலிருந்து ரயிலில் நேற்று சென்னை புறப்பட்டு சென்றனர்.
இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago