பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் த.பிரபு தொடங்கி வைத்தார். மண்டல குழு உறுப்பினர் பி.சத்தியநாதன் தலைமை வகித்தார். யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளர் வி.ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.இதில், எல்ஐசி, நான்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கலந்துகொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், இன்சூரன்ஸ் ஊழியர்களின் போராட்டக் குழுவின் கூட்டமைப்பின ஒருங்கிணைப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago