கரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை, திருவாரூர் நகராட்சி, செய்தித் துறை ஆகிய துறைகளின் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாவட்டம் முழுவதும் செய்தித் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் குறும்படங்களை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா 3-வது அலை பரவல் வருவதைத் தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், தேவையற்ற பயணங்களை தவிர்த்து அரசு கூறும் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் கீதா, திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago