விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பது:
கரோனா தொற்று காரண மாக முழு ஊரடங்கு அமல் படுத்தியிருந்த நிலையில், தற்பொழுது தளர்வுகள் அளிக்கப் பட்டு உணவுப்பொருள் கடைகள்செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட் களை பொட்டலமிடும்போது உறைகளை பிரிக்க எச்சில் தொட்டும், வாயால் ஊதியும் மற்றும் கைகளால் பிரித்தும் வருகின்றனர்.
ஏற்கெனவே கரோனா தொற்று தொடரும் நிலையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வாங்க செல்லும்போது பைகளைகொண்டு சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும். உணவு வணிகர்கள், கையுறை, முகக் கவசம் அணிந்து பொருட்களை பொட்டலமிட மற்றும் உறை யிலிட வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago