திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

ஆடி 18-ஐ முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை அதிகரித்தது. இதனால் விலையும் உயர்ந்தது.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஆடி 18-ஐ முன்னிட்டு வழக்கமாகவே பூக்களின் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு கரோனா காரணமாக கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதாலும், கிராமப்புறங்களில் கோயில் விழாக்களுக்குத் தடை உள்ளதாலும் பூக்களின் தேவை குறைந்தே காணப்பட்டது. இருந்தபோதும் ஆடி 18-ஐ கொண்டாட மக்கள் அதிகளவில் பூக்கள் வாங்குவர் என்ற நம்பிக்கையில் பூ மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் அதிகளவில் மொத்தமாக பூக்களை வாங்கிச் சென்றனர். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.450- க்கும், ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.350-க்கும், முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது நேற்று ரூ. 250-க்கும் விற்பனையாகின.

ஜாதிப்பூ, சம்பங்கி, அரளிப்பூ ஆகியவை ஒரு கிலோ ரூ.150-க்கும், ரோஸ் ரூ.80-க்கும் விற்பனையாகின. அனைத்துப் பூக்களின் விலையும் சற்று உயர்ந்தே காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்