உலக தாய்ப்பால் வாரத்தில் வேதனை - சிவகங்கையில் ஆண்கள் ஓய்விடமாக மாறிய பாலூட்டும் அறை :

By செய்திப்பிரிவு

தாய்பால் வாரவிழா கொண்டாடும் இத்தருணத்தில் சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆண்கள் ஓய்விடமாக மாறியுள்ளது.

உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஆண்டுதோறும் ஆக.1 முதல் ஆக.7 வரை கடைபிடிக்கப்படுகிறது. கூட்டம் நிறைந்த பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பசியால் அழும் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட சிரமப்பட்டனர்.

இதையடுத்து தாய்மார்கள் சிரமமின்றி தனிமையில் பாலூட்டும் வகையில் 2015-ம் ஆண்டு மாநகராட்சி, நகராட்சி பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் 351 இடங்களில் அறைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சிவகங்கை நகராட்சி பேருந்துநிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்களின் ஓய்விடமாக மாறியுள்ளது. எப்போது இந்த அறையில் ஆண்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த அறைக்கு கதவும் இல்லை.

இதனால் பாலூட்டும் தாய்மார்கள், இந்த அறையைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் பல இடங்களில் பாலூட்டும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன.

இந்த அறையை மீண்டும் தாய்மார்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடித்து வரும் இத்தருணத்தில் பயன்பாடின்றி உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்