பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள பங்களிப்புத் தொகையை மத்திய அரசை திரும்பப் பெற வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. பிர்கா அளவில், விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட்டு இழப்பீடு வழங்கி வருகின்றனர். இதற்காக, மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்பாக தலா 49 சதவீதம், விவசாயி பங்களிப்பாக 2 சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், தனி நபராக பாதிக்கப்படும் விவசாயிக்கு காப்பீடு கிடைப்பதில்லை.
எனவே, தனி நபர் காப்பீடு திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் வலியுறுத் தினர். அவர்களது கோரிக்கையை ஏற்கும் வகையில், தனி நபர் பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் தனி நபர் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் 60 லட்சம் விவசாயிகள், காப்பீடு திட்டத்தில் இணைவார்கள். கடந்த காலங்களில், 20 லட்சம் விவசாயிகள் இணைந் துள்ளனர். இந்நிலையில், மத்திய-மாநில அரசு களின் பங்களிப்பு தொகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்களிப் பாக 25 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பாக 73 சதவீதம், விவசாயி பங்களிப் பாக 2 சதவீதம் என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டு, மாநில அரசு பங்களிப்பாக ரூ.1,918 கோடி வழங் கப்பட்டது. இப்போது செய்யப் பட்டுள்ள மாற்றத்தால் ரூ.9 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். இதனை சுமையாக கருதி, விவசாயி பங்களிப்பு சதவீதத்தை உயர்த்தக்கூடாது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள பங்களிப்பு தொகைக்கான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தனி நபர் பயிர் காப்பீடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்த வேண்டும்” என்றார்.
விவசாயிகளின் தலையில் சுமையை அதிகரிக்க வேண்டாம் என வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் சிவா மற்றும் சரவணன், சம்பத், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago