கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் - கரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் தொடக்கம் : பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா விழிப்பு ணர்வு வார விழா நேற்று தொடங் கியது.

கடலூர் பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு வாரத் தினை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தொடக்கி வைத்தார். பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன வீடியோ வாக னத்தின் மூலம் கரோனா

விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது. வண்டிப்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண் டபத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

எஸ்பி சக்திகணேசன், கூடுதல்ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங்,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி பூந்தோட்டகுளத்தில் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பாக கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி ஸ்ரீநாதா தொடக்கி வைத் தார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷணப்ரியா, துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கரோனா விழிப்புணர்வு பிரச்சார வார விழாவினை நேற்று ஆட்சியர் பி.என்.தர் தொடக்கி வைத்தார். கரோனா மூன்றாம் கட்ட பரவலில் இருந்துபாதுகாத்துக் கொள்ள அனைவ ரும் கரோனா தடுப்பூசி செலுத் திக் கொள்ள வேண்டும் என்றுஆட்சியர் தெரிவித்தார். முன்னதாகபொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் கரோனா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையாளர் குமரன்,அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக் கண்காணிப் பாளர் நேரு, மேலூர் வட்டாரமருத்துவ அலுவலர் பாலதண்டா யுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்