விழுப்புரத்தில் கரோனா விதிமுறைகள் பின்பற்றாத - 61 கடைகள், 6 பேருந்துகளுக்கு அபராதம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் கரோனா விதி முறைகள் பின்பற்றாத 61 கடைகள், 6 பேருந்துகளுக்கு வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்று வட் டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது நகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் என 10 கடைகளில் கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் குளிர்சாதன வசதியை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 10 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் ரூ.5 ஆயிரம் அதிகாரிகள் அபராதமாக வசூலித்தனர். இதேபோல் கரோனா பாதுகாப்பு விதியை பின்பற்றாத மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 42 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது. இனிமேலும் இதுபோன்று கரோனாபாதுகாப்பு விதிகளை பின்பற்றா மல் இருந்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் எச்சரித்தனர்.

இதே போல் நேற்று கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காத ஒரு அரசுப்பேருந்து மற்றும் 5 தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ 5ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வளவனூரில் 5 கடைகளுக்கு ரூ 16 ஆயிரமும், விழுப்புரம் நகரில் 4 கடைகளுக்கு ரூ 12,500 அபராதம் விதித்தனர். ஒரு கடை சீல் வைக்கப்பட்டது.

கடைகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்