நரிப்பையூர் பனங்காடு கொலை வழக்கு - 3 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் கைது :

By செய்திப்பிரிவு

சாயல்குடி அருகே நரிப்பையூர் பனங்காடு பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனா்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப் பாளா் இ.கார்த்திக் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை மகன் முத்து. இவரது உடல் எரிந்த நிலையில் நரிப்பையூா் பனங்காட்டில் இருந்து 2018-ம் ஆண்டு போலீஸார் மீட்டனர். இவ்வழக்கை கீழக்கரை டி.எஸ்.பி.திருமலை தலைமையில் தனிப் படையினரின் விசாரித்தனர்.

அப்போது, முத்து தனது பரம்பரைச் சொத்தில் தனக் குக் கிடைத்த பங்கை கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த குணசேகரனுக்கு விற்றதாகவும், முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றதும் தெரிய வந்தது. நிலத்தை குணசேகரனுக்குப் பத்திரப் பதிவு செய்து தராமலிருந்த முத்து, முன்பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதனால் இவரை குணசேகரன், அவரது உறவினர்கள் உட்பட 4 போ் சோ்ந்து கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.

இந்நிலையில், குணசேகரன் கடந்த 2020-ம் ஆண்டு புற்று நோயால் உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும் இவ்வழக்கில் குணசேகரனின் உறவினர்களான வேதமாணிக்கம் (46), பால்பவுன் ராஜ் (32), ஜோசப் ராஜன்(49) ஆகியோரை தனிப் படை போலீஸார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்