முதியோர் பயன்படுத்தும் வகை யில் சோலார் சைக்கிளை வடிவமைத்த பள்ளி மாணவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பாராட்டினார்.
சிவகங்கை கல்லூரிச் சாலையைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் வீரகுரு ஹரிகிருஷ்ணன் (12). திருப்புவனம் வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்காத நிலையில் வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்தார்.
இந்நிலையில் சைக்கிள் ஓட்ட சிரமப்படும் முதியோர்களுக்காக சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார்.
இந்த சைக்கிளை போதிய சூரிய ஒளி இல்லாத சமயத்தில் மின்சாரத்திலும் இயக்கலாம்.சூரிய ஒளி இருக்கும்போது முழுமையாகவும், மின்சாரத்தை ரீஜார்ஜ் செய்தால் 5 மணி நேரம் ஓட்ட முடியும். இந்த சைக்கிளை 25 முதல் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டலாம். இந்த சைக்கிளை வடிவமைக்க ரூ.10 ஆயிரம் செல வழித்துள்ளார். இந்த சைக்கிள் வடிவமைப்பில் அவரது சகோதரர் சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் சம்பத் கிருஷ்ணனும் உதவியாக இருந் துள்ளார். சகோதரர்கள் இருவரின் முயற்சியை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago