மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் முஸ்லிம் மாணவர் களுக்கான இலவச ‘யுபிஎஸ்சி’ பயிற்சியில் சேர, வரும் 20-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் முஸ்லிம் மாண வர்களுக்கான ‘யுபிஎஸ்சி கோச்சிங் அகாடமி’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 12-ம் தேதி தொடங் கவுள்ளன. பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, உறைவிட வசதி வழங்கப்படும். இங்கு, இந்திய ஆட்சிப் பணி, இந்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருப்பதுடன் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியின் இணையதள முகவரியில் பெறலாம்.
பயிற்சியில் சேர விரும்புபவர் களுக்கு கொள்குறி வடிவில் நுழைவுத் தேர்வுடன் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி அகாடமியின் தலைவராக ஜனாப் எஸ்.ஜியாவுதீன் அஹ்மது சாஹிப், இயக்குநராக கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.சாஜித், ஒருங்கிணைப்பாளராக எஸ்.முகமது யாசிர் ஆகியோர் செயல்படுகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு 98940-14664 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago