ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 4418 தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஈரோடு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆயிரம் நபர்களுக்கு தனியார் நிறுவன சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
நாமக்கல்லில் உதவி
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 3791 தொழிலாளர்களுக்கு ரூ.70.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 5, 434 நபர்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 40 பேருக்கு ஆட்சியர் மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago