பிஏபி 4-ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் - பாசனத் திட்ட வாய்க்கால்களை : தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தில் பாலாறு படுகை 4-ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 3-ம் தேதி முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுகளுக்கு 9 ஆயிரத்து 500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்க இயலும் என, விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பல்லடம் விரிவாக்க பகுதிகளில் பாசனத்திட்ட வாய்க்கால்களை தூர்வார வேண்டு மென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பல்லடம் பகுதிவிவசாயிகள் கூறும்போது, "வீரபாண்டி, மங்கலம், பூமலூர், இச்சிப்பட்டி, வீரபாண்டி, சாமளாபுரம் உள்ளிட்ட பல்லடம் விரிவாக்க பகுதிகளில் வாய்க் கால்களில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சி.பொன்னுசாமி கூறும்போது, "எங்கள் பகுதியிலுள்ள வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மங்கலம்பாசன சபைக்கு வரும் வாய்க்காலில் வேலம்பாளையம் அருகேபுதிய ஷட்டர் அமைத்து, தண்ணீர்சேதாரத்தை குறைக்க வேண்டும்.மங்கலம் கிராமசபைக்கு உட்பட்ட1,2, 4 மற்றும் 7 ஆகிய பகுதிகளிலுள்ள வாய்க்கால்களை செப்பனிட்டு புதிய ஷட்டர்களை அமைத்து தர வேண்டும்" என்றார்.

பல்லடம் பொதுப்பணித் துறைஅதிகாரிகள் கூறும்போது, "நிதி வந்ததும், தூர்வாரும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்" என்ற னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்