கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தில் - பயிர் மேலாண் பண்ணைப் பள்ளி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கடலூர் வட்டாரம் உச்சிமேடு கிராமத்தில் பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

கடலூர் வேளாண் துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். உச்சிமேடு கிராமத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள 26 முன்னோடி விவசாயிகள் பண்ணைப் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 6 வாரங்கள் இப்பண்ணைப்பள்ளி நடைபெறும். விவசாயிகளுக்கு பாட வகுப்பு எடுக்க அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கோபால் தேர்வு செய்யப்பட்டு வகுப்பு நடை பெறுகிறது. சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆரோக்கியமான பயிர் வளர்ப்பு, பூச்சி நோய் நிர்வாகம், வாராந்திர பயிர் கண்காணிப்பு போன்றவற்றை விவசாயிகளே வயலை ஆய்வு செய்து தங்களுக்குள் ஆலோசிக்க வழிகாட்டப்பட்டது. இதில் விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காய்கறி சாகுபடி குறித்த கையேடு வழங்கப்பட்டது.

கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக மகசூல் பெற மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் உதவி வேளாண் அலுவலர் சிவமணி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பழனிச்சாமி, பிரேம்குமார்,அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் .ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்