நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி முஷ்ணத்தில் மறியல் :

By செய்திப்பிரிவு

முஷ்ணத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி யில் அறுவடை செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் கொட்டி வைத்து, அரசு நேரடி நெல் கொள்முதல் திறக்கும் என காத்துக்கிடந்தனர்.

சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் நெல் நனைந்தது.இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந் தனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வேதனை அடைந்தனர். முஷ்ணம் வட்டாச்சியர் அலுவலகம் அருகில் முஷ்ணம் - ஆண்டிமடம் சாலை யில் நேற்று விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த முஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டி செல்வி மற்றும் போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் கலைந்துச் சென்றனர்.

உடனடி நடவடிக்கை

இந்நிலையில் நேற்று மாலை யில் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்