தமிழக அரசை கண்டித்து, விருதுநகர், சிவகங்கை, ராமநா தபுரத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 குறைப்பு உள்ளிட்ட வாக் குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் நேற்று தங்கள் வீடுகளுக்கு முன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச் சரும் மாவட்டச் செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அவரது வீட்டின் முன் பதாகைகளை ஏந்தி ஆர் ப்பாட்டம் நடத்தினர். சிவகாசியில் நகர் செயலாளர் அசன் பதூரூதீன் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் எம்எல்ஏ மான்ராஜ் தலைமையிலும் இது போல மாவட்டத்தில் 198 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளரும், எம்எல் ஏவுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னி லை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ நாகராஜன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன் னாள் அமைச்சர் அன்வர்ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago