காவல்துறை தொடர்பான செய்தி களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, மதுரையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தமிழக டிஜிபியிடம் பாராட்டு பெற்றார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முபராக் அலி (31). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துள்ளார். 2013-ல் காவல்துறையில் பணியில் சேர்ந் தார்.
நாளிதழ்களை படிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், போலீஸ் தொடர்பான எல்லா செய்திகளையும் காவல்துறை நண்பர்களுக்கும் சமூக ஊடகம், வாட்ஸ்ஆப்- குரூப்களில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் காவல்துறையின் சமூக ஊடகப்பிரிவு (சோசியல் மீடியா) எஸ்பியாக இருந்த வருண்குமாரின் கவனத்துக்கு முபராக் அலியின் ஊடகப் பணி தொடர்பான தகவல் சென்றதால், அவரது திறமையை பாராட்டி, சமூக ஊடகப்பிரிவில் அவர் பணி புரிய வாய்ப்பளித்தார்.
இதற்கிடையில், முபராக் அலியின் பணி குறித்து ஒருங் கிணைந்த குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கும்தெரியவந்தது.
அவர் சில தினத்துக்கும் முன்பு முபராக் அலியிடம் பேசியுள்ளார். இருப்பினும், நாளிதழில் வந்த காவல்துறை தொடர்பான செய்தி குறித்த தகவல் ஒன்றை அவரிடம் கேட்டபோது, அந்த தகவலை அடுத்த நாள் எஸ்பி சரவணனுக்கு அனுப்பினார். தாமதத்துக்கு காரணம் கேட்டபோது தனது மொபைல் பழுதானதால், உடனே தகவல் அனுப்ப முடியவில்லை என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதனையடுத்து, அவருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள ‘செல் போன் டேப்’ ஒன்றை வாங்கிக் கொடுத்து, அவரது பணியை எஸ்பி சரவணன் ஊக்கப்படுத்தியதாக முபராக்அலி தெரிவிக்கிறார்.
இந்நிலையில், முபாரக் அலியின் பணியை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவருக்கு பாராட்டுச் சான்றிதழை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து முபாரக் அலி கூறும்போது, டிஜிபி பாராட்டி யதை வாழ்நாளில் மறக்க முடி யாது. இது எனது பணியை மேலும் ஊக்கப்படுத்தும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago