கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வல்வில் ஓரி உருவப்படம் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18-ம் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு விழாவை மாவட்டம் நிர்வாகம் ரத்து செய்து அறிவித்துள்ளது. எனினும், வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணவித்தல் மற்றும் பொது இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சுற்றுலா மற்றும் கலாச்சார ஆர்வலர் ஆர். பிரணவக்குமார் கூறியதாவது:
கரோனா பரவல் காரணமாக கொல்லிமலையில் அரசு சார்பில் நடத்தப்படும் வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவரது உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்றைய தினம் கொல்லிமலைக்கு மக்கள் செல்வதை தடை செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago