பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கூறியது: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், 1,551 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.5.97 கோடி மற்றும் ரூ.5.97 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 75 பேருக்கு ரூ.3.35 லட்சத்தில் தையல் இயந்திரங்கள், 3-ம் பாலினத்தவர் 7 பேருக்கு அடையாள அட்டையுடன் கரோனா முதற்கட்ட நிவாரணத் தொகையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.14,000 என மொத்தம் 11.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்