தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூறி, பலரிடம் பண வசூலில் ஈடுபட முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது கணவரை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூரில் உள்ள பிரபல மருத்துவர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சிலரை அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என அறிமுகம் செய்து கொண்டு, அரசின் வளர்ச்சித் திட்டங் களுக்கு ஆட்சியர் பணம் தேவைப் படுவதாக கூறியுள்ளதாக தெரி வித்து, ரூ.50 ஆயிரம் பணம் அனுப்புமாறு கூறி, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதில், சந்தேகமடைந்த சில மருத்துவர்கள், இதுகுறித்து தஞ்சாவூர் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர் பாக, நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸார் மேற்கொண்ட விசார ணையில், தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தெரிவித்த வங்கிக் கணக்கு எண், கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதி யைச் சேர்ந்த பியூட்டி பார்லர் நடத்தி வரும் ரெஜினா என்ப வருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கோவைக்குச் சென்று ரெஜினாவிடம் மேற்கொண்ட விசாரணையில், சினிமாவுக்கு மேக்கப் போடுவதற்காக அட்வான்ஸ் அனுப்புவதாகக் கூறி, தனது வங்கிக் கணக்கு எண்ணை ரீட்டா பபியா என்பவர் பெற்றுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, திருவள் ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டா பபியாவை(50) நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசார ணையில், அவரும், அவரது கணவர் சந்தானபாரதியும் இதே போல கரூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பெயரில் மோசடியில் ஈடுபட்டு கைதானவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும், இதற்காக சினிமா சூட்டிங் என்ற பெயரில் ஏதாவது ஒரு அழகுக்கலை நிபுணரின் வங்கிக் கணக்கு எண்ணை வாங்கி, அந்த எண்ணுக்கு மாவட்ட ஆட்சியர்களின் பெயரைச் சொல்லி தொழிலதிபர்களை தொடர்புகொண்டு பணத்தை அனுப்பக்கூறி, பணம் வந்தது உறுதியானதும், தனது உதவியா ளர் கூடுதலாக பணம் அனுப்பி விட்டதாகக் கூறி, அழகுக் கலை நிபுணர்களிடமிருந்து பணத்தை சந்தானபாரதி பெற்றுக் கொள் வதும் தெரியவந்தது.
தொடர்ந்து, தலைமறைவாக உள்ள சந்தானபாரதியை போலீ ஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago