தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மன்பேட்டை விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரம் தலை வர் மத் கிருஷ்ணானந்த மகராஜ் (75) நேற்று முக்தியடைந்தார்.
இவர் திருப்பராய்த்துறை ராம கிருஷ்ண தபோவனத்தின் நிறு வனர் மத் சுவாமி சித்பவானந்த மகராஜிடம் பிரம்மச்சாரி தீட்சை பெற்று தொடர்ந்து மத் சுவாமி நித்யானந்த மகராஜ் அவர்களிடம் சன்யாச தீட்சை பெற்றார்.
2001-ம் ஆண்டு முதல் அம் மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்தா சேவாஸ்ரத்தின் தலைவராக இருந்து வந்தார். வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அம்மன் பேட்டை ஆசிரம பவதாரணி ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபி ஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆஸ்ரமத்தில் மகா சமாதியடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு சிறப்பு ஆராதனையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சுவாமி மாத்ருசேவானந்தா, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்தா, செயலாளர் சுவாமி சத்யானந்தா, அகில பாரதீய சன்னியாசிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரக்கர் சித்தர் சுவாமிகள், கும்ப கோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள், கும்பகோணம் தென் பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை செயலாளர் சத்திய நாராயணன், பொருளாளர் வேதம் முரளி மற்றும் பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ராமகிருஷ்ண விவேகானந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago