திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட - பெரியார் காலனி சாலையை சீரமைக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட பெரியார் காலனி பகுதியில் 15 வீதிகள் அமைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 7, 8 வீதிகள் மற்றும் முத்து கோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைக்கப்போவதாக, அதிமுகவைசேர்ந்த சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டு, பூமி பூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பழைய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்ட நிலையில், தேர்தலை காரணம்காட்டி அப்படியே பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. மேலும், அந்த வழியாக வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்லும்போது, விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, பெரியார் காலனி முத்துகோபால் நகர் பகுதியில் திரண்டனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களுடன் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் 26-ம் தேதிக்குள் சாலை பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்தனர். குறிப்பிட்டதேதிக்குள் சாலை பணிகள் தொடங்கப்படாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என முற்றுகையிட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்