திருப்பூரை சேர்ந்தவர் மந்தைவீரன் மனைவி பாண்டியம்மாள் (64). இவரது மகன் ஆசைப்பாண்டி (37), மகள்கள் மல்லிகா (49), பாண்டி மீனா (38), தவமணி (31). சரவணன் என்பவரை தவமணி திருமணம் செய்தார். இவர்களுக்கு பிதா சுதன், மரியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் தவமணி மதுரையில் வாழ்ந்து வந்தார்.
திருப்பூரில் சரவணன் இருந்ததால், அடிக்கடி குழந்தைகளை சென்று பார்த்து வந்தார். அப்போது குழந்தைகளை பார்த்துக் கொள்வது தொடர்பாக பாண்டியம்மாளுக்கும், சரவணனுக்கும் இடையே 2017 அக்டோபர் 27-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பாண்டியம்மாள், ஆசைப்பாண்டி, மல்லிகா, பாண்டிமீனா ஆகியோர் சேலையால் கழுத்தை நெரித்ததில் சரவணன் உயிரிழந்தார். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து, 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு, திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 4 பேருக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் ப.முருகேசன் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago