வெளியூர் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் கரோனா அச்சத்தால் வர தயங்குவதால் உணவகங்களில் 50 சதவீத வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுரை மாநகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. இதில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் பணி புரிந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநில தொழிலாளர்கள். தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் ஹோட்டல்கள் வியாபாரம் மட்டும் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. பெரிய ஹோட்டல்களில் 50 சத வீதம் வியாபாரமும், சிறிய ஹோட்டல்களில் 30 முதல் 40 சதவீதம் வியாபாரம் மட்டுமே நடக்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருவதால் மதுரைக்கு சுற்றுலா, வியாபாரம், மருத்துவம் ரீதியாக வருவோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆம்னி பஸ்களும் தினமும் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையிலே இயக்கப் படுவதால் பேருந்து நிலைய பகுதியில் உள்ள பெரிய ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் வராமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவரும், டெம் பிள் சிட்டி ஹோட்டல்கள் உரிமையாளர் குமார் கூறுகையில், ‘‘ஹோட்டல் களில் 50 முதல் 60 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. 50 சதவீதம் இருக்கை களில் மட்டுமே வாடிக்கை யாளர்களை அமர வைக்க சொல்லியிருப்பதால் மக்கள் கூட்டமாக சாப்பிட வரும்போது அவர்களை முழு அளவில் ஹோட்டலில் அமர வைக்க முடியவில்லை. கரோனால் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது வரை முழுமையாக வராததால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாடுகிறோம். அனைத்து வகை உணவுப்பொருட்கள் விலையும் கூடிவிட்டது. ஏற்கெனவே வியாபாரம் குறைந்துவிட்டதால் விலைவாசி உயர்வுக்கு தகுந்தாற்போல் உணவு வகைகளின் விலையை அதிகரிக்க முடியவில்லை.
ஆனால், ஹோட்டல்கள் மூடிக்கிடந்த ஊரடங்கு காலங்களுக்கு மின்சார கட்டணமும், சொத்து வரியும், ஜிஎஸ்டி வரியும் கேட்கிறார்கள். குறைந்தப்பட்சம் ஹோட்டல் தொழில்களை பாதகாக்க தமிழக அரசு மின்சார கட்டணம், சொத்துவரி, ஜிஎஸ்டி வரியிலிருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago