பார்வை குன்றிய மாணவர்களுக்கு கையடக்க உருப்பெருக்கி கருவி :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குறை கண் பார்வையுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கையடக்க உருப்பெருக்கியை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாற்றுத்திறனாளி களின் நலன் காப்பதற்காகவும், அவர்க ளுடைய வாழ்க்கைத் தரம் உயர் வதற்காகவும், 9-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புக்கு மேல் பயிலும் குறை கண் பார்வைத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கு படிக்கும்போது ஏற்படும் சிரமங் களை போக்கும் விதமாக, எழுத்துகளை பெரிதாக்கி காட்டக்கூடிய கையடக்க வீடியோ உருப்பெருக்கி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. குறை கண் பார்வைத்திறனுடைய மாண வர்கள் சிரமமின்றி எழுத்துகளைப் படிப்பதற்கு இந்த கருவி மிகவும் ஊன்றுக்கோலாக அமையும் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்