தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த கல்யாணஓடை கிராமத் தைச் சேர்ந்தவர் செந்தில்(53). அதிமுக மதுக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர்.
2020-ம் ஆண்டில் முத்துப் பேட்டை பகுதியில் ராஜேஷ் என்பவர் படுகொலை செய்யப் பட்ட வழக்கில், மதுக்கூர் போலீஸார் செந்திலை கைது செய்து தஞ்சாவூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்படி, செந்திலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago