தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இருதினங்களுக்கு முன்பு வெளியிடப் பட்ட நிலையில், மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளி 13 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி 54 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகளைச் சேர்ந்த 15,009 மாணவ, மாணவி கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் மதிப்பெண் பட்டியலை நேற்று முதல் பதிவிறக்கம் செய்தனர். தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் மற்றும் பிளஸ்-1 தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். அதில், எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வரும் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் அவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago