வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,792-ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டது. 306 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 51,553-ஆக உயர்ந்துள்ளது. 50,084 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாதொற்றுக்கு 2 பேர் உயிரிழந் துள்ளனர். இதனால், உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 635-ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago