கிராம்பு, மிளகு பயிரிட மானியம் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு, கிராம்பு பயிர்களை பயிரிட ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம், 125 ஹெக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் கூறும்போது, “2021-22-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சிஇயக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

நறுமணப் பயிர்களான மிளகு, ஜாதிக்காய், கிராம்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்ய, ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 125 ஹெக்டேருக்கு மானியம்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மிளகு, ஜாதிக்காய், கிராம்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

மேலும், உதகை தோட்டக்கலை உதவி இயக்குநர் 8489604087, குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 6381963018, கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9994749166, கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 8903447744 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளித்து, உழவன் செயலியில் பெயரை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்