செம்மை நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பரிசு ரூ.5 லட்சம், பதக்கம் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 7200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட் டுள்ளது. இதில் விவசாயிகள் பலர், கூடுதல் விளைச்சல் தரும் தொழில்நுட்பமான “செம்மை நெல்” செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். தற்போது, செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம் ரொக்க பரிசும், ரூ 7 ஆயிரம் மதிப்பில் பதக்கம்வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இப்பரிசு மற்றும் பதக்கத்தை பெற கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்விருதினை பெற நெல் நடவு செய்து 15 நாட்கள் கழித்து, ரூ.150 பதிவு கட்டணம் செலுத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரசீது பெற வேண்டும்.
இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் தேர்வு செய்து, ஆய்வுக்கு பிறகு அதிக மகசூல் பெற்ற விவசாயிக்கு முதல்வரால் ரூ.5 லட்சம் ரொக்க பரிசும், ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள விருதும் வழங்கப்படும்.
எனவே, செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா ( 94425 59842), வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் (85268 09678) ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago