நாகரசம்பட்டி அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை அகற்றிவிட்டு புதியதாக கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1951-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. இப்பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப் பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ளது.
இதனால் சுற்றுச் சுவரின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக மாணவர் களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிலர் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி சுற்றுச்சுவர், இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பள்ளி செயல்பட தொடங்கும் முன்பே, சேதமான சுற்றுச் சுவரை அகற்றிவிட்டு புதிய சுவரை கட்ட வேண்டும் என் றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago