செஞ்சியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை கூடும் வார சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த வார சந்தையில் செஞ்சி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். மேலும் செஞ்சி பகுதி மலை மிகுந்த பகுதி என்பதால் மலை பிரதேசங்களில் மேய்ச்சலுக்கு விடும் வெள்ளாடுகள் ஆடுகளின் கறிகள் சுவை மிகுந்ததாக இருப்ப தால் அதிக அளவில் ஆடுகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே செஞ்சி ஆட்டு சந்தை பரபரப்பாக காணப்பட்டது. கரோனா பொது முடக்க தளர்வால் ஓராண்டுக்குப் பின் மீண்டும் வார சந்தை பரபரப்பாக காணப்பட்டது. நூற்றுக்கணக்கான வேன்கள், ஆயிரக்கணக்கான ஆடுகள் என சந்தை நிரம்பி வழிந்தது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மலை ஆடு, செம்மறி ஆடு, வெள்ளாடு என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
ஒரு ஆட்டின் விலை குறைந்த பட்சம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என விலை போனது, ஒரு சில ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரே நாளில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற் பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago