தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி 2.10 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது. அதன்படி கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு கரும்பு வழங்கப்பட்டன.
மேலும் உணவுப்பொருட்களை ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் இடம்பெற்ற பையில் வைத்து கொடுத்தனர். பல இடங்களில் பைகள் தாமதமாக வந்ததால் கார்டுதாரர்களுக்கு பைகள் கொடுக்கவில்லை. இதையடுத்து மீதியிருந்த பைகளை ஊழியர்கள் ரேஷன் கடைகளில் குவித்து வைத்திருந்தனர்.
சிலசமயங்களில் பொருட்கள் வாங்க பைகள் இல்லாமல் செல்வோருக்கு, அந்த பைகளை கொடுத்து வந்தனர். இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றுள்ளதால், ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் இடம்பெற்ற பைகளை எக்காரணம் கொண்டும் கார்டுதாரர்களுக்கு கொடுத்து விடக் கூடாது. மேலும் அப்பைகளை ரேஷன் கடைகளில் வைத்திருக்காமல் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விடுங்கள் என சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago