காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி கடைத்தெருவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் தமயந்தி, ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாநிலக் குழு உறுப்பினர் குருமணி, ஒன்றிய துணைத் தலைவர்கள் தங்கம், விஜயா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago