பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, பட்டுக்கோட்டையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில், காஸ் சிலிண்டர், இருசக்கர வாகனத்துக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில், தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அன்பழகன், செந்தில், அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ராஜாதம்பி கலந்து கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago