கரோனா பேரிடர் காலத்தில் - மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு விருது :

By செய்திப்பிரிவு

கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் விருதுகள் வழங் கப்பட்டன.

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் திருப்பத்தூர் ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில், மகாத்மா முதியோர் இல்ல வளாகத்தில் காமராசர் திறந்த வெளி அரங்கம் திறப்பு விழா, லயன்ஸ் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருப்பத்தூர் ரத்னாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் வினோத் வரவேற்றார். லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரத்தின நடராஜன் முன்னிலை வகித்தார். ரத்னாஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் கிஷோர் பிரசாத் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கரோனா கால கட்டத்தில் நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவை யாற்றிய ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவமனையின் தலைமை மருத்தவர் வி.விக்ரம்குமார், வேலூர் புற்று மகரிஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டி.பாஸ்கர் உள்ளிட்ட 8 மருத்துவர்களுக்கு ‘சிறந்த மருத்துவர்கள்’ என்ற விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அதேபோல, கரோனா காலத்தில் தன்னலம் பாராமல் நோயாளிகளுக்கான பணியாற்றிய சமூக ஆர்வலர் களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆளுநர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் கீழானூர் ராஜேந்திரன், லயன்ஸ் சங்கத்தின் 2-ம் மாவட்ட ஆளுநர் புவனேஷ்வரி, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சிவாஜி, முனிசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்