வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு :

By செய்திப்பிரிவு

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி ஒன் றரை வயது குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் குமார். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த ராஜ்குமார், கடந்த ஏப்ரல் மாதம் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனது கணவர் உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவுசல்யா 3 முறை மனு கொடுத் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று 4-வது முறையாக ஆட்சியர் அலுவல கத்தில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் வந்து அதிகாரி களிடம் மனு அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் சின்னதுரை. அஞ்சல் நிலையத்தில் பொது மக்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்திருந்த பணத்தை சின்னதுரை கையாடல் செய்ததால் அவரை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் தங்களது பணத்தை மோசடி செய்த சின்னதுரை மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்பப் பெற்றுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்