மன்னார்குடி அருகே 54 நெம்மேலி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அங்கு கொட்டிவைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்தி முன்பட்ட குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர். மன்னார்குடி, கோட்டூர், சேரன்குளம், 54-நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது முன்பட்ட குறுவை சாகுபடி செய்த வயல்களில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 54 நெம்மேலி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, அங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்து கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் அவ்வப் போது பெய்யும் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கி யுள்ளன. இதனால், விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது, “நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து, நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை என்றால், அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி மறியல் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago