கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் குறைந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. 38 ஆயிரத்து 785 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 307 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 990 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 4.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், மாவட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று மாவட்டத்தில் 60 இடங்களில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயது முதல் 44 வயதுக்குள்ளானவர்கள் என 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்ள தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி முகாமிற்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago