நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 85 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்ட ஆட்சியர்தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பணிக் குழுவின் சார்பில் வாரந்தோறும் நடைபெறும்ஆலோசனைக் கூட்டத்தில்,பல்வேறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அத்துடன்,கரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் பாதுகாப்புகருதி பல்வேறு திட்டங்கள்,குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசு வழங்கும் உதவிகள் முழுமையாக கிடைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த 49 குடும்பங்களைச் சேர்ந்த 85 குழந்தைகள் உள்ளனர். அத்துடன் இவர்களில் 2 குழந்தைகளுக்கு தாய், தந்தை இருவரும் உயிரிழந்ததால், அவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவியும், முழு படிப்பு செலவும், மற்ற 83 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பரிந்துரை செய்துள்ளார். தற்போது இக்குழந்தைகள், அவரவர் உறவினர்களின் பாதுகாப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago