50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெற - சிறுநாகலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் :

தியாகதுருகம் அருகே சிறுநாக லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரி யன், ஏஜே. மணிகண்ணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத் தனர்.

சிறு நாகலூர், பொறையூர், செம்பியன்மாதேவி, பின்னல் வாடி, நின்னையூர், கொட்டையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில், தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, சிறுநாகலூரில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதற்கு அனு மதி வழங்கியது.

அதன்படி சிறுநாகலூரில் நேற்று இந்நிலையம் திறக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு திமுக வின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.மண்டல மேலாளர் ஷீலா, தரக்கட்டுப்பாட்டு மேலாளர் உமாமகேஸ்வரி, கண் காணிப்பாளர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உளுந்தூர் பேட்டை சட்டப்பேரவை உறுப்பி னர் ஏஜே.மணிகண்ணன் அனை வரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சங்கரா புரம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இணைந்த கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 4 திமுக எம்எல்ஏக்கள் இருந்த போதிலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சரு மான பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி மக்களவை உறுப் பினர் கவுதமசிகாமணி ஆகியோர் மாவட்ட நிகழ்ச்சிகளில் முன்நிற்பது வழக்கம்.

இந்த நிலையில் தனித்தனியாக செயல்பட்டு வந்த திமுக எம்எல்ஏக்கள் 3 பேரும் நேரடி நெல் கொள்முதல் திறப்பு விழாவின் மூலம் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE