கல்வராயன்மலையில் கைகான் வளவு அணைக்கட்டு திட்டப் பணிகளை உடனடியாக கைவிடவேண்டும் என கல்வராயன் மலைவாழ் மக்களும், கள்ளக் குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற் குட்பட்ட கல்வராயன்மலையில் ஆரம்பூண்டியில் உற்பத்தியாகும் காட்டாறு, சேலம் மாவட்ட பகுதிக்குட்பட்ட தெற்கு நாடு, கைகான் வளவு, நவம்பட்டு எறும்பூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் வழியாக பாய்ந்து மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளாறு, மேல் வெள்ளாறு, கரியாலூர் உள்ளிட்ட 50 கிராமங்களின் வழியாக கோமுகி அணைக்கு வரும் பிரதான ஆறாக உள்ளது. இந்த காட்டாற்றின் மூலமே கோமுகி அணை முழுக் கொள்ளளவை எட்டும்.
எனவே இந்த நீரை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரிதும் பயனடைகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்ட எல்லையில் கைகான் வளவு என்ற இடத்தில் கால்வாய் தோண்டி அந்த நீரை சேலம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டும் பணி கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தியும் பணிகளை நிறுத்தவில்லை.
இந்நிலையில் கைகான் வளவு திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டத்தில் 5,700 ஹெக்டேர் பாசன பரப்பும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 25,000 ஹெக்டேர் பாசன பரப்பும் பாழாகும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கஜேந்திரன் கூறுகையில்,
‘‘கட்டாற்றில் உற்பத் தியாகும் உபரி நீரை பயன்படுத்திதான்சேலம் மாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது என பொதுப் பணித்துறையினர் கூறினாலும், உண்மையில் முந்தைய ஆட்சியாளர்கள் தங்க ளுக்கு சாதகமான சூழலை உரு வாக்கும் நோக்கத் தில் தான் இந்தத் திட்டம் உருவாக் கப்பட்டது. மேலும், இத்திட்டத்தை அமல் படுத்துவதற்காக முந்தைய அரசு வருவாய்த்துறை மூலம் மலையில் வாழும் பழங்குடி மக்களின் விவசாய நிலங்களை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வாங்கி அதற்கான மாற்று நிலங் களையும் சரியாக ஒப்படைக்காமல் அவர்களை நிற்கதியாய் தவிக்க விட்டுள்ளது.
எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை ஆய்வு செய்து,மாற்று திட்டத்தை செயல்படுத்தி மலைவாழ் மக்களும், விவசாயி களும் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago