கரோனா முன்களப் பணியாளர் களாக அறிவிக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கு காலத்திலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வரும் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு ஆகியவற்றை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் ஏஜென்சிகளில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டம் முழுவதும் ஒரு நாளில் விநியோகிக்கப்படும் 25,000 காஸ் சிலிண்டர்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி, ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை.சுதாகர் முன்னிலை வகித்தார்.
இதேபோல, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கணேஷ், செயலாளர் எஸ்.அமர்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், மாநிலப் பொரு ளாளர் ஜி.பரமசிவம், மாவட் டத் தலைவர் பி.சந்திரமோகன், செயலாளர் கே.கோவிந்தராஜ், பொருளாளர் ஏ.செங்கிஸ்கான் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago