திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் - மின்தடை ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் : மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முழுமை யடைந்துள்ளன. மீறி மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இம்மாத தொடக்கத்தில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது தான் இதற்கு காரணம் என்றும், இதனால், மின் வாரியத்துக்குட்பட்ட துணை மின்நிலையங்கள் மற்றும் மின்பாதைகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து துணை மின் நிலையங்களிலும் மின்பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக 2 மணி நேரம் நடைபெற்று வந்தது.

அதன்படி, திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியார் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்டு திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் ஆகிய 4 மின் கோட்டங்களில் மொத்தம் 16 துணை மின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மின்பாதைகள் மற்றும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, முன்அறிவிப்புடன் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதில், 4 ஆயிரத்து 416 இடங்களில் மின்பாதைகளுக்கு அருகில் இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன. 594 இடங்களில் மின்கம்பங்கள் மாற்றியமைக் கப்பட்டன. சாய்ந்து கிடந்த 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கப்பட்டன. 168 மின்பாதை களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண் டனர்.

இதனால், இனி மின்தடை ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி ஏதாவது தடை ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக சரி செய்ய அனைத்து மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

எனவே, மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின் விநியோகம் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள், குறைகள் இருந்தால் உடனடியாக மின் வாரிய அலுவலகத்தில் முறையிடலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்