இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஜுலை 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். 2021-22-ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக் கான மாணவர்கள் சேர்க்கைக்காக rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக ஜுலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
தி.மலை மாவட்டத்தில் உள்ளவட்டார கல்வி அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங் கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய அலுவலகங்களில் நுழைவு நிலை வகுப்பு (எல்கேஜி) சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக இலவசமாக பதிவேற்றம் செய்யலாம்.
கல்வி அலுவலகங்கள் மற்றும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் மற்றும் விவரங்களை தகவல் பலகை மூலமாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago