சிறுபான்மையின மக்கள் சுயதொழில் புரிந்திட - குறைந்த வட்டியில் டாம்கோவில் கடனுதவி : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் டாம்கோ மூலம் கடனுதவி பெற தகுதி யான சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் புரிந்திட தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக் கான சிறு தொழில் கடன், கை வினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங் கள் செயல் படுத்தப்படுகின்றன.

இதில், திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகரப் பகுதிகளைச் சேர்ந்தவராக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவராக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ், தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண் களுக்கு 6 சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

ஆண் கைவினைக் கலைஞர் களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். சுய உதவிக் குழுக் கடன் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் என ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் ஒரு நபருக்கு ரூ.1.50 லட்சம் என கடன் வழங்கப்படும்.

இது தவிர சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும்.

எனவே, வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் நல அலுவலகம், வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு வங்கிகளில் அணுகலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்