314 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 314 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதால் கரோனா தடுப்பூசியை தகுதியுள்ளவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும்,

அதேநேரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 98 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 பேருக்கு தொற்று நேற்று உறுதியான நிலையில், 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். 590 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

தி.மலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 199 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தின் மொத்த கரோனா பாதிப்பு 49,339 -ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்